என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சர்வதேச கால்பந்து தரவரிசை
நீங்கள் தேடியது "சர்வதேச கால்பந்து தரவரிசை"
நடப்பு கால்பந்து உலக சாம்பியனான ஜெர்மனி அணி, சர்வதேச கால்பந்து தரவரிசையில் முதலிடத்துடன் உலக கோப்பை கால்பந்து தொடரில் களமிறங்க உள்ளது. #FIFA2018 #Germany #FIFArankings
உலக கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது. இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷியாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் 64 போட்டிகளை கொண்ட இத்தொடர் ரஷியாவின் 11 முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் ஜூலை 15-ம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் ஜெர்மனி அணி நடப்பு சாம்பியன் என்ற பெருமை மட்டுமின்றி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி என்ற பெயருடன் உலக கோப்பையில் களமிறங்க உள்ளது. இது அந்த அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என கூறப்படுகிறது.
இந்த தரவரிசையில் ஜெர்மனி, பிரேசில், பெல்ஜியம், போர்ட்டுகல், அர்ஜெண்டினா ஆகிய அணிகள் அடுத்தடுத்து முதல் ஐந்து இடங்களில் உள்ளன. 66வது இடத்தில் இருந்த ரஷியா அணி, நான்கு இடங்கள் பின்தங்கி 70-வது இடத்தில் உள்ளது. இதுவே சர்வதேச அளவில் ரஷியா அணியின் மோசமான தரமாகும். #FIFA2018 #Germany #FIFArankings
×

X